ஷாக் ஆகிடுவீங்க!… சொத்துக்காக இப்படியொரு கொடூரமா?… 61 வயது பாட்டிக்கு பேத்தி கொடுத்த கொடூர தண்டனை… பின்னணியில் பகீர் திட்டம்…!!

By Gayathri on ஐப்பசி 2, 2026

Spread the love

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள ஆயூர் பகுதியில், சொத்து தகராறு காரணமாக சொந்த பாட்டியின் மீதே பேத்தி கொதிக்கும் நீரை ஊற்றிய கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குடும்ப வன்முறை தொடர்பாக, 18 வயதான அமிர்தா என்ற இளம்பெண்ணை சடையமங்கலம் காவல் துறையினர் தற்போது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி, 61 வயதான மூதாட்டி ராதாமணி வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது இந்த கொடூர தாக்குதல் அரங்கேறியுள்ளது. குடும்பத்தில் நிலவி வந்த சொத்து பிரச்சனை முற்றிய நிலையில், அமிர்தா திடீரென கொதிக்கும் நீரை எடுத்து வந்து பாட்டியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஊற்றியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்த மூதாட்டி, உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

   

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பேத்தி அமிர்தாவை கைது செய்தனர். காவல் துறை விசாரணையில், தனது தாயார் அஸ்வதியின் தூண்டுதலின் பேரிலேயே தான் பாட்டியின் மீது வெந்நீரை ஊற்றியதாக அந்த இளம்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது தாயார் அஸ்வதியை காவல்துறையினர் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்.