பிரபல நடிகரான அஜித் மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது. இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் குட் பேட் அக்லி படத்திலும் அஜித் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. அந்த கொண்டாட்டத்தில் அஜித் கலந்து கொண்டு நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது.
போட்டி முடிந்த பிறகு நடராஜன் மலரும் நினைவுகள் குறித்து பேசினார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கமெண்ட்ரி நிகழ்ச்சியில் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தனது பிறந்த நாளன்று அல்டிமேட் ஸ்டார் அஜித்தை சந்தித்தது பற்றி கூறினார். அவர் கூறியதாவது ஹைதராபாத் அணியுடன் இரவு உணவுகளை சாப்பிட சென்றபோது சர்ப்ரைஸ் ஆக அஜித்தை பார்த்தேன்.
எனக்கு பிறந்தநாள் என்றதால் கேக் வெட்டி கொண்டாடினர். முதல் முறையாக அஜித்தை அங்கு தான் பார்த்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் மிகவும் எளிமையானவர் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல ஆசைப்படுகிறேன். நாங்க சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தோம். அப்போது என்னுடைய கார் உட்பட அனைவருக்கும் கார் கதவை திறந்து அஜித் தான் வழி அனுப்பி வைத்தார். அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.