சுடுகாட்டில் இருந்து வந்த குரல்… அதைக் கேட்டு வேலையைவிட்ட கிரேஸி மோகன் – அந்த குரல் யாருடையது தெரியுமா?

By vinoth on ஆனி 15, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வசனங்களில் வார்த்தை விளையாட்டுகள் நடத்தி நகைச்சுவையை வரவைப்பவர் எழுத்தாளர் கிரேஸி மோகன். நாடக மேடையில் இருந்து சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் கிரேஸி மோகன். 1989 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன கல்யாணத்துக்கு கல்யாணம், பிரைசில் கிரேசி, விடாத சிரிப்பு உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட நகைச்சுவை தொடர்களிலும் கிரேசி மோகன் வேலை பார்த்துள்ளார்.

கிரேசி மோகன் கிரேசி கிரியேஷன்ஸ் என்ற நாடக நிறுவனத்தை நடத்தினார். அவர் சின்னத்திரை சீரியல்களுக்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வந்தார். அதன் பின்னர்தான் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தார் கமல். அவர் எத்தனையோ படங்களில் பணியாற்றி இருந்தாலும் கமல்ஹாசனோடு அவர் இணையும் படங்கள் காமெடிக்கு 100 சதவீதம் கியாரண்டி.

   

அதற்கு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், காதலா காதலா, பஞ்சதந்திரம் மற்றும் பம்மல் கே சம்மந்தம் ஆகிய படங்களே சாட்சி. இந்த படங்களின் வசனங்களை மட்டுமே தனியே கேட்டால் கூட விழுந்து விழுந்து சிரிக்கும் அளவுக்கு இருக்கும்

   

தமிழ் திரை உலகில் நகைச்சுவை நடிகர், வசனகர்த்தா என பன்முகத் திறமை கொண்டவராக இருந்த கிரேஸி மோகன், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பத்தாம் தேதி மாரடைப்பால் கிரேசி மோகன் உயிரிழந்தார். இது தமிழ் சினிமா உலகுக்கு நிச்சயம் ஒரு இழப்புதான்.

 

#image_title

இந்நிலையில் கிரேஸி மோகனின் தம்பி கிரேஸி மாது, நாடகம் மற்றும் தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு மோகன் எப்படி சினிமாவுக்கு வந்தார் என்ற சுவாரஸ்யமான கதையைப் பகிர்ந்துள்ளார். அதில் “மோகன் ஒருநாள் தன்னுடைய ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருக்கும் போது சுடுகாட்டில் ஒரே கூட்டமாக இருந்துள்ளது. அப்போது அவரை ஒரு தாடிக்காரர் பெயர் சொல்லி அழைத்துள்ளார்.

யார் என்று தெரியவில்லையே அவரை அருகில் சென்று பார்த்துள்ளார். அந்த தாடிக்காரர் “உங்கள் நாடகங்கள் எல்லாம் பார்த்தேன். நன்றாக உள்ளது. சினிமாவுக்கு வருகிறீர்களா? சினிமா என்றால் அதை முழு நேரத் தொழிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் வேலையை விட்டுவிடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

அதைக் கேட்ட கிரேஸி மோகன் மறுநாளே வேலையைவிட்டார். அந்த குரல் வேறு யாருடையதும் அல்ல, கமல்ஹாசனின் குரல்தான். அவர்தான் சத்யா பட ஷூட்டிங்கின் போது சுடுகாட்டில் வைத்து மோகனை வேலையை விட சொன்னார்” எனப் பகிர்ந்துள்ளார்.