பிக் பாஸ் வீட்டில் கேமரா முன் தனியாக புலம்பும் தனம்!… என்ன நடந்தது?… பரபரப்பான ப்ரொமோ இதோ…

பிக் பாஸ் வீட்டில் கேமரா முன் தனியாக புலம்பும் தனம்!… என்ன நடந்தது?… பரபரப்பான ப்ரொமோ இதோ…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளின் முதல் பிரமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இறுதியாக பிக் பாஸ் வோட் வீட்டில் இருந்து ராம், ஆயிஷா வெளியேற்றப்பட்டுள்ளனர். 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்களே உள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது இன்றுடன் 68 நாளை நிறைவு செய்கிறது.

வெற்றியாளர் யார் என அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான டாஸ்காக போட்டியாளர்கள், சொர்க்கவாசிகள் நரகவாசிகள் என பிரிக்கப்பட்டுள்ளனர். எப்பொழுதும் போல சண்டைக்கு பஞ்சமே இல்லை.

மிகவும் சுவாரசியமாக நடைபெற்று வரும் இந்த டாஸ்க்கின் இன்றைய நாளுக்கான முதல் பிரமோ வெளியாகியுள்ளது. இதில் தனலட்சுமி நரகவாசியாக மாற்றப்படுகின்றார். இதை தொடர்ந்து மணிகண்டன், அமுதவாணன், ஜனனி, ஏடிகே  ஆகியோர் nomination free zoneல் நுழைபவர்கள் என பிக் பாஸ் அறிவிக்கிறார்.

இதை தொடர்ந்து தனலட்சுமி ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து ‘மூன்று நாள் விளையாடினதிற்கு காரணமே இல்லாமல் வெளியே வந்து விட்டேன்.. இங்க அவனவன் friends ஐ அவனவன் தான் உள்ளே அனுப்பப் பார்ப்பான்’ எனக்கூறி புலம்புகிறார் இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ ….

Begam