Connect with us

பொது மேடையில் பெண் Anchor-யிடம் அத்துமீறிய Cool சுரேஷ்.. கடுப்பாகிய Anchor.. வைரல் வீடியோ..

CINEMA

பொது மேடையில் பெண் Anchor-யிடம் அத்துமீறிய Cool சுரேஷ்.. கடுப்பாகிய Anchor.. வைரல் வீடியோ..

 

சமூக வலைத்தளங்களின் மூலம் மிகப் பிரபலமானவர் நடிகர் கூல் சுரேஷ். இவர் நடித்த திரைப்படங்களை விட இணையத்தின் மூலம் தான் இவர் மிகப் பிரபலமாக உள்ளார் என்றே கூறலாம். இவர் நடிகர் சிம்புவின் தீவிர ரசிகர் என்பதும் நாம் அனைவரும் அறிந்து ஒன்றே. இவரை வெள்ளிக்கிழமை நாயகன், youtube சூப்பர் ஸ்டார் என்று அவரது ரசிகர்கள் அழைக்கின்றனர்.

   

தற்போது நடிகர் மன்சூர் அலிகான் ஹீரோவாக களமிறங்கும் திரைப்படம்  சரக்கு. இப்படத்தை இயக்குனர் ஜெயக்குமார் இயக்கியுள்ளார். ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடித்திருக்கிறார். மேலும் மொட்டை ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், வினோதினி, பயில்வான் போன்ற முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் மன்சூர் அலிகான், பாக்யராஜ், பயில்வான் மற்றும் கூல் சுரேஷ் போன்றோர் கலந்து கொண்டனர். பொதுவாக கூல் சுரேஷ் ஒரு இடத்தில் இருந்தால் அங்கே சர்ச்சை கண்டிப்பாக வெடிக்கும். அதே போல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூல் சுரேஷ், இந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த தொகுப்பாளினிக்கு திடீரென்று கழுத்தில் மாலை போட்டு விட்டார்.

தொகுப்பாளினி மிகவும் கடுப்பாகி கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். இதைத்தொடர்ந்து அவர் நான் மாலை போட்டதற்கு முக்கிய காரணம் இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவரையும் மிக மரியாதை உடன் வரவேற்பு செய்தற்காக தான் என்று சமாளித்தார். ஆனால் இவர் செய்த செயலுக்கு நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

Continue Reading
To Top