தன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சுற்றுலா சென்ற ‘குக் வித் கோமாளி’சீசன் 3 போட்டியாளர் ஸ்ருதிகா … வைரலாகும் புகைப்படம்…

By Samrin

Updated on:

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ரியாலிட் ஷோக்களில் ஒன்று ‘குக் வித் கோமாளி’ இந்த நிகழ்ச்சி ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

   

தற்போது குக் வித் கோமாளி’4 சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. குக் வித் கோமாளி சீசன் 3 போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை ஸ்ருதிகா.

இவர் தந்தை சிவசங்கர் தாய் கல்பனா. இவரது தாத்தா  நடிகர் தேங்கா சீனிவாசன் . சென்னையில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்தார்.

இவர் 2002 ஆம் ஆண்டு நடிகர்  சூர்யா நடிப்பில்வெளியான படம் ‘ ஸ்ரீ’ இந்த  படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவர் ‘ஸ்ரீ’   படத்தில் நடிக்கும் போது இவருடைய வயது 16.இப்படமானது   மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.

இவர் தமிழில் தித்திக்குதே, நள  தமயந்தி ,ஆல்பம் போன்ற ஒரு சில படங்களில் மட்டும் நடித்தார். அதை தொடர்ந்து ஒரு சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளர்.

அதன் பின்னர் தனது படிப்பில் கவனம் செலுத்தி வந்தார் .அதனால்   திரைத்துறையில் இருந்து விலகினார்.

அதன் பிறகு  ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். ‘குக் வித் கோமாளி’சீசன் 3 டைட்டில் வின்னரும் கூட .

இவர் தற்போது ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் சீசன் 4’ நீதிபதியாக பணியாற்றுகிறார். நடிகை ஸ்ருதிகா  அர்ஜுன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு ஆரவ் என்ற ஒரு மகனும் உள்ளார். தற்போது இவர் தன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியா சுற்றுலா சென்றுள்ளார்.இந்த புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.