
CINEMA
‘தலைகீழ என்னம்மா பண்றீங்க’… விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட வைரல் புகைப்படம்… வியந்து போன ரசிகர்கள்…
‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அரைகுறை தமிழ் பேசி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தவர் சுனிதா. இவருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1.1 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ ஷோவிலும் பங்கேற்று டைட்டில் ஜெயித்திருந்தார். தனக்கு ரசிகர்கள் கொடுத்த இந்த ஆதரவுக்கு மிக உருக்கத்துடன் நன்றியும் கூறியிருந்தார். இவர் அவ்வப்போது விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம் வந்து கொண்டுள்ளார்.
அதோடு மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் சுனிதா. அவ்வப்பொழுது தனது ஹாட் போட்டோ சூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்பொழுது இவர் தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குக் வித் கோமாளி சுனிதாவா இது வியந்து போய் செய்து வருகின்றனர்.