குக் வித் கோமாளியில் ‘போராடுவோம்..போராடுவோம்’.. என போராட்டத்தில் குதித்த கோமாளிகள்… என்ன நடந்தது தெரியுமா?… பரபரப்பான ப்ரோமோ உள்ளே…

குக் வித் கோமாளியில் ‘போராடுவோம்..போராடுவோம்’.. என போராட்டத்தில் குதித்த கோமாளிகள்… என்ன நடந்தது தெரியுமா?… பரபரப்பான ப்ரோமோ உள்ளே…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி  ஷோக்கலில் ஒன்று ‘குக் வித் கோமாளி’. இந்நிகழ்ச்சியானது 2019 முதல் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களிடம் பெற்ற பேராதரவை தொடர்ந்து 3 சீசன்களை கடந்து, தற்பொழுது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சமையல் நிகழ்ச்சியை இவ்வளவு கலகலப்பாகவும் காமெடியாகவும் கொடுக்க முடியும் என்பதை இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நிரூபித்து வருகிறது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கோமாளிகள் செய்யும் சேட்டைகள் ஏராளம். இதில் கலந்து கொண்ட கோமாளிகளும் குக்குகளும் சீக்கிரத்தில் பிரபலமாகி விடுகின்றனர். சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கிக் கொண்டிருந்த மணிமேகலை எந்தவித காரணமும் அறிவிக்காமல் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

இதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பலவாறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டது.அந்த சர்ச்சை ஓய்வதற்குள்ளேயே கோமாளி குரேஷியும் விலகுவதாக ஒரு தகவல் வெளியாகி வைரல் ஆனது. ஆனால் இது பொய்யான தகவல் என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது.இந்நிலையில் தற்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இதில் பரோட்டா டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஸ்ருஷ்டி புகழை திட்டி அனுப்பி விடுகிறார்.இதனால் புகழ் ‘கோமாளியை அவதூறாக பேசியதால் வெளிநடப்பு செய்கிறோம்’ எனக் கத்த ‘போராடுவோம் போராடுவோம்’ என கோமாளிகளும் கத்தி போராடுகிறார்கள்.  இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam