‘குக் வித் கோமாளி ‘மணிமேகலையின் தம்பி இவர்தானா?… அடடே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே…

‘குக் வித் கோமாளி ‘மணிமேகலையின் தம்பி இவர்தானா?… அடடே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே…

தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமாகி தற்பொழுது மிகவும் பிரபலமாக வலம் வந்து கொண்டுள்ளவர் மணிமேகலை. இவரை பிரபலமாகியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றே கூறலாம். இந்நிகழ்ச்சியில் கோமாளியாக இவர் செய்த சேட்டைகள் ஏராளம். இதை தொடர்ந்து இவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உருவானது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்கு சீசன்களிலும் கோமாளியாக கலக்கி வந்தார் மணிமேகலை.

ஆனால் திடீரென சில வாரங்களுக்கு முன்னால் இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இதற்கு என்ன காரணம் என இதுவரைக்கும் மணிமேகலை கூறவில்லை. இருப்பினும் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகித்துக் கொண்டுதான் வருகிறது. சமீபத்தில் கூட இவர் தான் வீடு ஒன்று கட்ட இருப்பதாக பூஜை செய்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் மணிமேகலை. இவர் அவ்வப்பொழுது தனது வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது கணவர் மற்றும் தம்பியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அடடே இவர்தான் மணிமேகலையின் தம்பியா?’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம்….

Begam