“ஐயோ தப்பு பண்ணிட்டோமே”… கதறி அழுத 5 முன்னாள் எம்எல்ஏக்கள்…. விஜய் போட்ட ஒரே ஒரு உத்தரவு…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட 7 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர்களின் ராஜினாமா மற்றும் முதல்வர் விஜய் வெற்றி பெற்று துறந்த திருச்சி கிழக்கு தொகுதி என மொத்தம் 8 தொகுதிகள் காலியானதால், விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் சுட்டிக்காட்டி திருச்சி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 31 வரை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இதனால் இடைத்தேர்தல் களத்தில் ஒரு தற்காலிகத் தேக்கம் உருவாகியுள்ளது.

மற்றொருபுறம், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இந்த எம்.எல்.ஏ.க்களின் பதவிகளைப் பறிக்கக் கோரி அதிமுக தலைமை சபாநாயகர் ஜெசிடி பிரபாகரிடமும் நீதிமன்றத்திலும் முறையிட்டுள்ளது. இத்தகைய சட்டச் சிக்கல்களுக்கு மத்தியில், ஆதவ் அர்ஜுனாவின் ‘வாய்ஸ் ஆஃப் காமன்’ நிறுவனம் நடாத்திய கருத்துக் கணிப்பில், திருச்சி கிழக்கு தவிர்த்து மற்ற 7 தொகுதிகளிலும் தவெகவுக்கு எதிர்மறையான முடிவுகளே கிடைத்துள்ளன. இந்த சர்வே முடிவுகளின் அடிப்படையில், முதல்வர் விஜய்யின் உத்தரவுப்படி, இரு விஜயபாஸ்கர்களைத் தவிர மீதமுள்ள 5 பேருக்கு வரும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.

   

போட்டியிட சீட் மறுக்கப்பட்டதால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த 5 முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் (சேர்மன்) பதவிகளையாவது வழங்குமாறு கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு, “பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் நல்ல முடிவு எட்டப்படும், அதுவரை பொறுமையாக இருங்கள்” என அமைச்சர்கள் தரப்பில் சமாதானம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அதிருப்தியில் உள்ள இவர்கள், தலைமைச் செயலகப் பக்கமும் வருவதைக் குறைத்துக் கொண்டு, ஒருவித அரசியல் குழப்ப நிலையிலேயே நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

   

இந்தச் சூழலில், தங்கள் அதிமுக நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசும் அந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், “அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அவசரப்பட்டு தவறான முடிவை எடுத்துவிட்டோம்; இனி தவெகவில் எங்களுக்கு அரசியல் எதிர்காலம் இருப்பதாகத் தெரியவில்லை” என்று புலம்பி வருவதாகக் கூறப்படுகிறது. சீட் கொடுத்தாலும் ஜெயிக்க முடியாத சூழல் நிலவுவதாகவும், கட்சியில் தங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். ஆசைகாட்டி அழைக்கப்பட்டவர்கள் இப்போது கட்சியிலும் முக்கியத்துவமின்றி, அரசியலிலும் முகவரியை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தவெகவின் உள்வீட்டு அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.