திமுக ஃபைல்கள் ஓபன்…! தூக்கம் தொலைத்த மாஜி அமைச்சர்கள்… ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் விஜய்…. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!

By Devi Ramu on ஆடி 31, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், லஞ்ச ஊழலுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளார். தனது ஆட்சியில் எந்தவித லஞ்ச ஊழலும் இருக்காது என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அரசுத் துறைகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்த விவரங்களைத் திரட்டி, சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த ஆதாரங்களுடன் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்குத் நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டாஸ்மாக் முறைகேடுகள் மட்டுமன்றி, அனைத்துத் துறைகளிலும் நிகழ்ந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தவும், இதில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் என யாரையும் விட்டுவைக்காமல் நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாகவே அண்மையில் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி ஆக்ஷன் உத்தரவால், ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பல முக்கியப் புள்ளிகள் விரைவில் சிறைக்குச் செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.