மோசடி வழக்கு.. தங்க மீன்கள் பட தயாரிப்பாளருக்கு சிறை.. அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..

By Mahalakshmi on ஜூன் 27, 2024

Spread the love

செக் மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமாருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் புரியாத புதிர், தங்க மீன்கள், குற்றம் கடிதல், தரமணி உள்ளிட திரைப்படங்களை தயாரித்தவர் ஜே சதீஷ்குமார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு சினிமா பைனான்சியரான ஜெகன் என்பவரிடம் 97 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற்று இருக்கின்றார். இதற்காக அவரிடம் சதீஷ்குமார் காசோலை ஒன்றை வழங்கி இருக்கின்றார். ஆனால் அந்த காசோலையை வங்கியில் கொடுக்க பணம் இல்லாத காரணத்தினால் அது திருப்பி வந்துவிட்டது.

   

   

குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்தாத காரணத்தினால் சதீஷ்குமார் மற்றும் ஜேஎஸ் கே ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு எதிராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெகன் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்து இருக்கின்றார். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை நான்காவது விரைவு நீதிமன்ற நீதிபதி சந்திர பிரபா காசோலை மோசடி வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஜே சதீஷ்குமார் எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது.

 

இதனால் அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிப்பதாகவும், கடன் தொகையை ஒரு மாதத்தில் ஆண்டிற்கு 3 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்க வேண்டும் எனவும், தொகையை செலுத்தவில்லை என்றால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையை நீட்டித்து தீர்ப்பளித்து இருக்கின்றார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஜெகதீஷ் தரப்பில் கூறப்பட்டிருந்த நிலையில் தண்டனையை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருக்கின்றார்.

தற்போது ஃபயர் என்கின்ற பெயரில் புதிய திரைப்படத்தை தயாரித்து வருகிறார் ஜே சதீஷ்குமார். மேலும் இந்த படத்தை அவரை இயக்குவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் இப்படி ஒரு வழக்கில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர் ஜே சதீஷ்குமார். இப்படத்தில் சாக்ஷி அகர்வால், சின்னத்திரை நடிகையான ரட்சித்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.