ரயில் டிக்கெட் முன்பதிவு…! இனிமேல் 10 மணி நேரம் முன்பே…! வெளியான முக்கிய அறிவிப்பு…!!

By Devi Ramu on மார்கழி 19, 2025

Spread the love

ரயில் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு அட்டவணை தயாரிக்கும் முறையில் இந்திய ரயில்வே அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை புறப்படும் ரயில்களுக்கான முதல் பட்டியல், முந்தைய நாள் இரவு 8 மணிக்கே வெளியிடப்படும்.

அதேபோல், மதியம் 2 மணிக்கு மேல் கிளம்பும் ரயில்களுக்கான விவரங்கள் குறைந்தபட்சம் 10 மணி நேரத்திற்கு முன்னதாகவே தயார் செய்யப்படும். இந்த புதிய நடைமுறை மூலம் பயணிகள் கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல், தங்களது இருக்கை நிலையை முன்கூட்டியே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும்.

   

குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பயணிப்பவர்கள் தங்களது டிக்கெட் உறுதி செய்யப்பட்டதா என்பதை 10 மணி நேரத்திற்கு முன்பே அறிந்துகொள்ள இந்தத் திட்டம் பெரிதும் உதவும். காத்திருப்புப் பட்டியலில் இருக்கும் பயணிகள் தங்களின் பயணத் திட்டத்தை முன்கூட்டியே மாற்றியமைக்க இது ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

   

நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயணத்தின் போது ஏற்படும் தேவையற்ற குழப்பங்கள் தவிர்க்கப்பட்டு, ரயில் பயணம் இனிமையானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.