திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது காவல்துறை மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் அருகே நடைபெற்ற மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய்யை அவதூறாகவும் ஒருமையிலும் விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கு தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, அவர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட கடுமையான மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் திருச்செந்தூர் போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
