ஈரான் உடனான போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளதால், வளைகுடா நாடுகளில் மீண்டும் கடுமையான போர் பதற்றம் உருவாகியுள்ளது. ஹார்முஸ் நீரிணை பகுதியில் ஒப்பந்தத்தை மீறி 3 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள டிரம்ப், இந்த கடுமையான முடிவை எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 6% வரை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து, ஒரு பேரல் 75 டாலராக மாறியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படும் வேளையில், வளைகுடா பகுதியில் நிலவும் இந்த பதற்றமான சூழல் சர்வதேச சந்தைகளில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது.
