Whatsapp மூலமாக பரிசு பொருள் கிடைக்கும் என்று நம்ப வைத்து எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் இருந்து ஜிப்பே மூலமாக 45 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசிக்கும் இளம்பன் ஒருவர் டெய்லர் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். அவரோடு 13 வயது தம்பியும் வசித்து வருகிறார். இந்த சிறுவன் தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய அக்காவின் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அந்த செல்போனுக்கு whatsapp மூலமாக ஒரு மெசேஜ் வந்துள்ளது. அது 70 ஆயிரம் மதிப்புள்ள பரிசு பொருளை வென்றுள்ளீர்கள் இது பிரான்சிலிருந்து கொரியர் மூலம் அனுப்பப்படுகிறது. அதை பெற குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று தமிழில் எழுதப்பட்டுள்ளது.
இதை உண்மையான நம்பிய சிறுவன் அக்காவிடம் சொல்லாமலே ஜி பேயில் இருந்து முதலில் 5000 ரூபாய் அனுப்பியுள்ளார் .அதன்பிறகு தொடர்ந்து வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்ததால் மீண்டும் மீண்டும் பணத்தை மொத்தமாக 45 ஆயிரம் ரூபாய் அனுப்பி உள்ளார். அதன்பிறகு பரிசு பொருள் டெல்லி விமான நிலையத்தில் சிக்கி உள்ளது அதில் 70 ஆயிரம் டாலர் இருப்பதால் அதற்காக மேலும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அதை அனுப்பினால் உடனே பொருள் கிடைக்கும் எனவும் மீண்டும் மெசேஜ் வந்துள்ளது .இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன் எங்களிடம் பணம் இல்லை ஏற்கனவே அனுப்பிய பணத்தை திருப்பி கொடுங்கள் என்று கேட்டபோது அதற்கு பதில் வரவில்லை.
பிறகு அந்த நம்பருக்கு போன் செய்த போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. காலையில் அவருடைய சகோதரி ஆன்லைனில் பொருட்கள் வாங்க ஜிபே கணக்கை பார்த்தபோது பணம் இல்லாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தம்பியிடம் விசாரணைத்ததில் பரிசு பொருள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பியதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கா அது மோசடி என்பதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் டிஜிட்டல் கடன் வழங்கல் வேகமாக வளர்ந்தாலும், மோசடி ஆபத்தும் அதிகரித்துள்ளது. போலி செயலிகள், குறுஞ்செய்திகள், அபத்தமான சலுகைகள் மூலம்…
நேற்று நடைபெற்ற போர்ச்சுகல்லின் FIFA உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்ச்சை சைகையை கிளப்பினார். அதாவது…
அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே,…
பிஹார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள்…
வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், செல்வம், கோபத்தைக் குறிக்கும். டிசம்பரில் செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுவதால் சில…
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். கைகளை சுழற்றி, முன், பின், பக்கவாட்டு நடை போன்ற மாற்றங்களைச்…