மத்தியப் பிரதேசத்தின் ரேவா தொகுதி பாஜக எம்.பி.யான ஜனார்தன் மிஸ்ரா, சமூக வலைதளப் பதிவிற்காகத் தன் கைகளால் கழிப்பறை இருக்கையைச் சுத்தம் செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி, பெரும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில், எம்பியே நேரடியாக களமிறங்கி கழிவறை இருக்கையை சுத்தம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது ஒரு சமூக வலைத்தள ரீலுக்காகவே பிரத்யேகமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தாலும், அந்த வீடியோவின் உண்மையான நோக்கம் குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
பொதுமக்களிடையே தூய்மைப் பணியை ஊக்குவிக்கும் வகையில் இதற்கு முன்பும் இதுபோன்ற தூய்மைப் பணிகளில் மிஷரா ஈடுபட்டு தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறார். இருப்பினும், இந்த புதிய வைரல் வீடியோ அரசியல் வட்டாரங்களிலும் ஆன்லைன் தளங்களிலும் பொதுமக்களிடையே பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.
