விசுவாசம் நயன்தாராவை போல மாறிய பிக் பாஸ் ஜனனி… நயன்தாராவுக்கே டப் கொடுப்பாங்க போலயே… வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…

By Begam

Published on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோவில் ஒன்று பிக் பாஸ். ஐந்து சீசன்களின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் ஆறாவது சீசனும் ஒளிபரப்பாகி நிறைவடைந்தது.  இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருவர் தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி. ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு இலங்கை போட்டியாளர் கலந்து கொள்வது வழக்கமாகிவிட்டது.

   

அதைப்போல முந்தைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இவரைத் தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜனனி கலந்து கொண்டுள்ளார்.  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லாஸ்லியாவிற்கு  அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

விளம்பர படங்களிலும், தளபதி விஜய் உடன் லியோ திரைப்படத்திலும் நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இவரை பின்தொடர்ந்து வந்த ஜனனியும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளார்.

இவருக்கும் தற்பொழுது பட வாய்ப்புகள் குவிந்து  கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மிகவும் பொறுமையாக இவர் கதைகளை தேர்ந்தெடுத்து கொண்டிருக்கிறாராம்.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாரா போல புடவை கட்டி தாலி எல்லாம் அணிந்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.