பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் அறிவிப்பு…. போட்டியாளராக tiktok பிரபலம் …..வெளியானது உறுதி தகவல் …..

By Begam on புரட்டாதி 12, 2022

Spread the love

விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பிக் பாஸ் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வருடத்திற்கு ஒரு சீசன் என ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில், தற்போது பிக் பாஸ் 6 வது சீசனை நோக்கி காலடி எடுத்து வைத்துள்ளது.

   

ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருந்த சீசன் 6 சில காரணங்களால் தாமதமாகிப் போனது. தற்பொழுது அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக யார் யார் வருவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

   

 

சீசன் 6 ஐ சிம்பு தொகுத்து வழங்குவாரா? அல்லது கமல் தொகுத்து வழங்குவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். போட்டியாளர்கள் குறித்து விஜய் டிவி இன்னும் அதிகாரப்பூர் தகவல்கள் வெளியிடாத நிலையில், பிரபல youtuber மற்றும் டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து பிக் பாஸ் சீசன் 6 ல்  கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 6 மொத்தத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லை என்பது உறுதி.