பிளான் பண்ணி போட்டியாளர்களை வெளியேற்றும் பிக் பாஸ்!…. இதுதான் காரணமா!… தீயாய் பரவும் தகவல் இதோ!…

பிளான் பண்ணி போட்டியாளர்களை வெளியேற்றும் பிக் பாஸ்!…. இதுதான் காரணமா!… தீயாய் பரவும் தகவல் இதோ!…

ஹாலிவுட்டில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி ஹிட்டான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஆனது ஹாலிவுட்டில் 15 சீசன்களை கடந்து வெற்றிகரமாக நடந்து கொண்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழில் பிக் பாஸ் தொடங்கப்பட்டது. தமிழில் ஐந்து சீசன்களை கடந்து ஆறாவது சீசனில் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்து பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது பிக் பாஸ்.

75 நாட்களைக் கடந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை அடைய போட்டியாளர்கள் போராடிக் கொண்டுள்ளனர். தங்களது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றனர். 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஜனனி வெளியேற்றப்பட்டார்.

இதை தொடர்ந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ராம், ஜனனி, தனலட்சுமி இவர்களை பிக் பாஸ் பிளான் பண்ணி தான் வெளியேற்றியுள்ளார் என்ற ஒரு சர்ச்சையான கருத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏனெனில் இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்களுடைய ஓட்டுகளை பிஆர்ஓ மூலம் பணம் கொடுத்து வாங்கி வருவதாக தகவல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் அதிர்ச்சயடைய வைத்தது. இதை தொடர்ந்து தான் தற்போது விஜய் டிவி இவர்களை பிளான் பண்ணி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றி இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் கூறி வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்பது நமக்கு தெரியவில்லை.

Begam