பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழையப் போகும் முக்கிய பிரபலம்!… ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ்!… எகிறப்போகும் TRP!… 

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழையப் போகும் முக்கிய பிரபலம்!… ட்விஸ்ட் வைத்த பிக் பாஸ்!… எகிறப்போகும் TRP!… 

பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் நுழைய போகும் முக்கிய பிரபலம் குறித்த தகவல் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்போது விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த பிக் பாஸ்  நிகழ்ச்சி ஆனது ஐந்து சீசன்களை கடந்து தற்போது ஆறாவது சீசனில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை போன்று இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் கூட்டம் இவ்வளவு இருந்தது கிடையாது.

அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ஜனவரியில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த எபிசோடில் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க்  கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்கின் படி போட்டியாளர்களின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களை பார்த்ததும் போட்டியாளர்கள் எமோஷனலாக கண்கலங்கி அழும் தருணங்கள் இடம் பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள்  வைல்ட் கார்டு என்ட்ரியாக முக்கிய பிரபலம் ஒருவர் நுழைய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

முதலில் வைல்ட் கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டில் நுழைந்தார். இதை தொடர்ந்து தற்பொழுது நிகழ்ச்சியின் இறுதி கட்டத்தில் ,சமீபத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய தனலட்சுமி வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் திரும்பி பிக் பாஸ் வீட்டிற்குள் வர இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் நிகழ்ச்சிக்குள் மீண்டும் வர அதிக சம்பளம் கேட்பதாகவும் கூறப்படுகிறது.

Begam