கல்லூரியாக மாறி களை கட்டிய பிக் பாஸ் வீடு!… வண்ணமயமாய் வெளியான ப்ரோமோ இதோ!…

கல்லூரியாக மாறி களை கட்டிய பிக் பாஸ் வீடு!… வண்ணமயமாய் வெளியான ப்ரோமோ இதோ!…

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய நாளின் முதல் பிரமோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஆனது தற்பொழுது பிரபலமாக ஓடிக் கொண்டுள்ளது. 21 போட்டியாளர்களுடன் வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஜனனி குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். யார் டைட்டில் வெல்வார்கள் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. தற்பொழுது வரை மைனா நந்தினி மற்றும் ரக்ஷிதா இருவரும் குறைந்த வாக்குகள் பெற்று கடைசியில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இவர்களில் யாரேனும் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய நாளின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் பிக்பாஸ் வீடு இந்திரன் சந்திரன் கலைக் கல்லூரி ஆக மாற்றப்பட்டுள்ளது.

1950 களில் இருக்கும் கல்லூரியாக கொண்டு வர வேண்டும். ஒன் சைட் காதலில் காதலை ஓட்டும் ப்ரொபசர். இரண்டு நடன ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்ற ஒரு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது .கலை கல்லூரி ஆக மாறிய பிக் பாஸ் வீடு கலகலப்புடன் காணப்படும் வகையில் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ!…

Begam