Connect with us

குயில்களும் உன் குரலில் தோற்றுவிடுமே.. குடும்பத்துடன் பாடி அசத்திய பவதாரணி.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் வீடியோ..!!

CINEMA

குயில்களும் உன் குரலில் தோற்றுவிடுமே.. குடும்பத்துடன் பாடி அசத்திய பவதாரணி.. இணையத்தில் வெளியாகி வைரலாகும் வீடியோ..!!

 

பிரபல பாடகியான பவதாரணி இசை அமைப்பாளர் இளையராஜாவின் மகள் ஆவார். கார்த்திக் ராசா, யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபு பிரேம்ஜி ஆகியோர் பவதாரணியின் சகோதரர்கள். கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான பாரதி திரைப்படத்தில் இடம் பெற்ற மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலை பவதாரணி பாடினார்.

பிரபல பாடகி பவதாரிணி மறைவு: தலைவர்கள் இரங்கல் | Singer Bhavatharini passed  away - hindutamil.in

   

இந்த பாடலுக்காக பவதாரணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு தேடினேன் வந்தது, காதலுக்கு மரியாதை, பிரெண்ட்ஸ், அழகி, தாமிரபரணி, மங்காத்தா, அனேகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இடம்பெற்ற பாடல்களை பவதாரணி பாடியுள்ளார். கடந்த 2002-ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் ரிலீஸ் ஆன மித்ர் மை பிரண்ட் என்ற படத்தின் மூலமாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.

பவதாரணி (Bhavatharani): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள்,  மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil

பவதாரணியின் குரலால் வரும் பாடல்களை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரணி சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி மாதம் பரிதாபமாக உயிரிழந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நேற்று விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டாவது சிங்கள் பாடல் ரிலீஸ் ஆனது.

Singer Bhavadharani, daughter of Ilayaraja, passed away | இளையராஜாவின் மகள்  பாடகி பவதாரணி காலமானார் | பொழுதுபோக்கு News, Times Now Tamil

மறைந்த பாடகி பவதாராணி பாடுவது போல AI தொழில்நுட்பம் பயன்படுத்தி யுவன் சங்கர் ராஜா பாடலை இசை அமைத்துள்ளனர். தளபதி விஜய்யும் அந்த பாடலில் பாடி இருக்கிறார். ரிலீஸ் ஆன உடனே பாடல் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் பவதாரணி தனது சகோதரர்களுடன் இணைந்து பாடிய பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் இனிமையான குரலுக்கு சொந்தக்காரி பவதாரணி மறைவை எண்ணி வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

 

A post shared by VB (@vasukibhaskar)

author avatar
Priya Ram
Continue Reading
To Top