நடிகர் பாவா லட்சுமணன் வின்னர், கோவை பிரதர்ஸ், மாயி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.அதிலும் மாயி படத்தில் வாம்மா மின்னல் காமெடியின் மூலம் மக்களிடம் பிரபலமானவர் பாவா லட்சுமணன். இவர் பிரபல தயாரிப்பாளரான ஆர்பி சௌத்திரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்துள்ளார்.
சமீபத்தில் பாவா லட்சுமணன் அளித்த பேட்டியில் கூறியதாவது, சினிமா வாய்ப்புக்காக சென்னைக்கு வந்தேன். அப்போது பாரதிராஜா அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிப்பதற்கு ஆட்களை தேடிக் கொண்டிருந்தது தெரியவந்தது. உடனே ஆடிஷனலுக்காக பாரதிராஜா அலுவலகத்திற்கு சென்றேன். பாரதிராஜா என்னை பார்த்ததும் பையன் நல்லா இருக்கான். ஆனா ரொம்ப சின்ன பையனா இருக்கான்.
நம்ம கேரக்டருக்கு சின்ன அரும்பு மீசையாவது இருக்கணும். ஒரு மூன்று நாட்கள் காத்திரு நான் சொல்லி அனுப்புறேன் என கூறி அனுப்பி விட்டார். அந்த மூன்றாவது நாளில் தான் பாரதிராஜா கார்த்திக்கை பார்த்து அவரை அலைகள் ஓய்வதில்லை படத்தில் ஹீரோவாக தேர்ந்தெடுத்து விட்டார். கார்த்திக் நடிக்கவில்லை என்றால் அந்த படத்தில் நான் தான் ஹீரோவாக இருந்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ரசிகர்களால் நவரச நாயகன் என அன்புடன் அழைக்கப்படும் கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆகி மக்கள் மனதில் இடம் பிடித்தார். நவரச நாயகன் கார்த்திக் அந்த காலகட்டத்தில் பல பெண்களின் கனவு நாயகனாக இருந்தார். கார்த்திக் தனது திறமையால் அடுத்தடுத்த படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.