இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு செய்து ரசிகர்களை பெரிய அளவில் வருத்தத்தில் ஆழ்த்தியது. தனது தந்தை பாரதிராஜா போல் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்று மனோஜ் மிகவும் ஆசைப்பட்டார். இதற்காக பல முயற்சிகளை செய்தும் சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் மற்றும் ஈர நிலம் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தும் இவருக்கு சினிமாவில் நிலையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இப்படியான நிலையில் மாரடைப்பால் அவர் கடந்த மாதம் உயிரிழந்தார்.
அவருடைய மறைவு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய நிலையில் தற்போது மனோஜின் சித்தப்பாவும் பாரதிராஜாவின் சகோதரருமான ஜெயராஜ் மனோஜ் இறப்பு குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில், மனோஜ்க்கு இதயத்தில் இரண்டு மூன்று அடைப்பு இருந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்தோம். ஆனால் மனோஜ் எனக்கு ஆப்ரேஷன் வேண்டாம் என்று சொன்னார். நாங்கள் தான் மகள்கள் இருக்கிறார்கள் என்று எடுத்து சொல்லி பைபாஸ் சர்ஜரி பண்ண வைத்தோம். ஆப்ரேஷனுக்கு பிறகு எல்லாம் சரியாகி விட்டது என்று தான் மருத்துவர்கள் சொன்னார்கள். ஆனால் அன்று மாலை பப்பாளி பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அதன் பிறகு டீ வேண்டும் என்று கேட்க மருமகள் டீ போட்டுக் கொண்டு இருந்தார். அப்போதே எனக்கு ஏதோ பண்ணுது என்று சொல்லியபடி உயிரை விட்டார். எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றாக அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தான். காலையில் அப்பாவிடம் பேசிக் கொண்டு இருந்தான். அவர் தேனீ போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நாளைக்கு நீங்க போங்க நான் இரண்டு நாள் கழித்து வருகிறேன் என்று நன்றாக பேசிக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று என்ன ஆச்சு என்று ஒண்ணுமே புரியாமல் ஒரே மர்மமாக இருக்கிறது.
ஒருவேளை மனோஜ்க்கு வேறு ஏதாவது பிரச்சனை இருந்து எங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவோம் என்று நினைத்து மறைத்து விட்டாரா என்ற சந்தேகம் கூட வருகின்றது. 48 வயசு என்பது சாகுற வயசா. அனைவரிடத்திலும் எப்போதும் சந்தோஷமாக பேசிக் கொண்டே இருப்பான். யாராவது கஷ்டப்படுத்தினால் கூட அதைப்பற்றி மறந்துவிட்டு பேசக் கூடியவன். கடைசியில எல்லோரையும் விட்டுட்டு இப்படி போயிட்டான். யாரும் சோகத்தில் இருந்தாலே அவனுக்கு எப்போதும் பிடிக்காது. அவர்களை எப்படியாவது சிரிக்க வைத்து அவனும் மகிழ்ச்சியாக தான் இருப்பான்.
அவனுக்குள் சோகம் இவ்வளவு இருந்து அதனால இப்படி பிரச்சனை வந்துச்சுன்னு சொன்னா நம்ப முடியவில்லை. என்னோட பையன் போனதுக்கப்புறம் பாரதிராஜா அவனோட இறப்ப ஏற்றுக் கொள்ளவே இல்லை. போட்டோவை பார்த்து அழுதுகிட்டே என்னோட பையன் எப்ப வருவான் என்று ரொம்ப மன அழுத்தத்தில் இருக்கிறார். இதிலிருந்து நாங்கள் எல்லோரும் எப்படி மீண்டு வர போகிறோம் என்று எங்களுக்கே தெரியவில்லை என்று மனோஜ் சித்தப்பா அழுதபடியே பேட்டி அளித்துள்ளார்.