வேண்டவே வேண்டாம் என சொன்ன பாரதிராஜா… பாக்யராஜ் போட்ட டிராமா.. எமோஷனல் ஆகி கண்ணீர் சிந்திய கவுண்டமணி..

By vinoth

Updated on:

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. எம் ஆர் ராதா, பாலையா, சந்திரபாபு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என தொடர்ந்த பாரம்பரியத்தில் அடுத்ததாக வந்தவர் கவுண்டமணி. 80 களிலும் 90 களிலும் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து புகழின் உச்சத்தில் இருந்தார்.

60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

   

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானாலும் அடுத்தடுத்து கவுண்டமணிக்கு வாய்ப்புகள் குவியவில்லை. அதையடுத்து பாரதிராஜா இயக்கிய கிழக்கே போகும் ரயில் படத்திலும் வாய்ப்புக்காக போராட வேண்டி இருந்துள்ளது. அந்த படத்தில் காந்திமதியின் கணவராக நடிக்கும் கதாபாத்திரத்துக்கு கவுண்டமணியைப் போடலாம் என உதவி இயக்குனர் பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் கூறியுள்ளார்கள்.

ஆனால் இயக்குனர் பாரதிராஜாவுக்கோ அந்த கதாபாத்திரத்துக்கு டெல்லி கணேஷ் பொருத்தமானவராக இருப்பார் எனத் தோன்றியுள்ளது. இதனால் கவுண்டமணி வேண்டாம் என பிடிவாதமாக இருந்துள்ளார். ஆனால் கவுண்டமணியை ஆடிஷனுக்கு அழைத்து வந்து அவருக்கு மேக்கப் எல்லாம் போட்டு அவர் நடிக்கும் அவர் சிறப்பாக நடிப்பதை போல பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் வேண்டுமென்றே சிரித்துள்ளார்கள்.

அதைப் பார்த்து பாரதிராஜா பாக்யராஜை அழைத்து வேண்டுமென்றே நடிக்கிறீர்களா எனக் கேட்டுள்ளார். அதன் பின்னர் படத்தின் தயாரிப்பாளர் ராஜ்கண்ணு ‘கவுண்டமணிகு அந்த வேடம் நல்லாதான் இருக்கு’ என சமாதானப்படுத்தியுள்ளார். அதன் பின்னரே கவுண்டமணியை ஓகே செய்துள்ளார் பாரதிராஜா.

கவுண்டமணிக்கு கதாபாத்திரம் கிடைத்ததை அவரிடம் சொல்ல நள்ளிரவில் அவர் இருக்கும் இடத்துக்கு சென்றுள்ளார். கதாபாத்திரம் ஓக்கே ஆனதை சொல்லி அங்கிருக்கும் ஒரு கோயிலில் கற்பூரம் ஏற்றி வேண்டிக்கொள்ள சொல்லியுள்ளார். அந்த நேரத்தில் எமோஷனல் ஆன கவுண்டமணி கண்கள் கண்ணீரில் நிரம்ப அவர் கையைப் பிடித்து நன்றி தெரிவித்துள்ளாராம். இதை பாக்யராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.