CINEMA
69 ஆவது தேசிய திரைப்பட விருது…. சிறந்த திரைப்பட விருது மாதவனின் இந்த படத்திற்கு தானா..?
ஒவ்வொரு வருடமும் இந்திய அரசால் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவில் பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வருடம் தோறும் வழங்கப்பட்டு வரும் நிலையில் 69 ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இருந்து அறிவிக்கப்படுகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருது இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பெரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான விருது நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்டரி திரைப்படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை மாதவன் இயக்கி இருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.