100 வயதை கடந்த தம்பதியை சந்தித்து மிகப்பெரிய உதவி செய்த கருணை வள்ளல்.. வைரலாகும் வீடியோ..!!

By admin on ஆனி 23, 2024

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. முன்னதாக இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். இவரை பலரும் KPY பாலா என்று அழைக்கின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவது, ஏழை எளியோருக்கு உதவி செய்வது என தன்னால் முடிந்த சேவையை செய்கிறார்.

KPY Bala : மாதாமாதம் 50 பேருக்கு ப்ரொபோஸ் செய்யப்போகும் KPY பாலா : ச்சே.. கண்ணே கலங்குதுங்க !!

   

இந்த நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் KPY பாலா செய்யும் அனைத்து உதவிகளிலும் தனது பங்கு இருக்கும் என ஏற்கனவே கூறியிருந்தார். அதன்படி KPY பாலாவும் ராகவா லாரன்சும் இணைந்து கணவரை இழந்த பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்தனர். கழிப்பறை இல்லாத பள்ளிக்கு கழிப்பறை கட்டி கொடுத்தனர்.

   

ஹீரோவாகும் KPY பாலா... கடவுள் போல உதவிய லாரன்ஸ்.. குவியும் வாழ்த்துக்கள்! | KPY Bala debuts as a hero with the help of actor Lawrence - Tamil Filmibeat

 

கடந்த ஒன்றாம் தேதி ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற சேவையை தொடங்கினார். அதில் அவர் வளர்த்த பிள்ளைகள் உட்பட பலரும் இணைந்து தங்களால் முடிந்த உதவிகளை செய்து வந்தனர். KPY பாலாவும் மாற்றம் என்ற சேவையில் இணைந்தார். மாற்றம் என்ற சேவை மூலம் ராகவா லாரன்ஸ் ஏழை, எளிய விவசாயிகளுக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்தார்.

சென்னை மக்களை வாழவைத்த KPY பாலா! – Real One Media

KPY பாலா வயதான வாட்ச்மேனுக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.  இந்த நிலையில் நூறு வயது கடந்த ஒரு வயதான தம்பதியினருக்கு KPY பாலா வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். அவர்களின் செலவுக்கு பணம் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.