‘வணங்கான்’ படத்திலிருந்து ஹீரோவை மட்டுமல்ல ஹீரோயினையும் சேர்ந்து மாற்றிய பாலா… அடுத்த ஹீரோயின் இவரா?… இப்படி அவசர பட்டுடீங்களே…

‘வணங்கான்’ படத்திலிருந்து ஹீரோவை மட்டுமல்ல ஹீரோயினையும் சேர்ந்து மாற்றிய பாலா… அடுத்த ஹீரோயின் இவரா?… இப்படி அவசர பட்டுடீங்களே…

தமிழ் சினிமாவையே வேறொரு கண்ணோட்டத்தில் காட்டி தனக்கென ஒரு இடம் பிடித்தவர் இயக்குனர் பாலா. பார்ப்பதற்கு எப்போதும் ரப் அண்ட் டப்பாகவே இருந்தாலும் இவரது படங்கள் அனைத்துமே நின்னு பேசும் அளவில் இருக்கும். இவர் தற்பொழுது நடிகர் சூர்யாவை வைத்து ‘வணங்கான்’ திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார்.

ஆனால் இத்திரைப்படத்தில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யா திரைப்படத்திலிருந்து விலகியது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் அருண் விஜய் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து படப்பிடிப்பை தொடங்கியுள்ளார் இயக்குனர் பாலா. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.

முதல் பாகத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி செட்டியே இப்படத்திலும் ஜோடியாக நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஹீரோயினையும் மாற்றி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் பாலா.

அதன்படி கதிர் நடிப்பில் வெளியான ‘ஜடா’ என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்த ரோஷினி பிரகாஷ் என்பவர்தான் அருண் விஜய் உடன் தற்பொழுது ஜோடியாக நடித்து வருகிறாராம்.  இத்திரைப்படத்தின் படப் பிடிப்பானது இன்னும் ஒரு மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்றும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Begam