செம நோஸ்கட் கொடுத்த பாக்கியா… அதிர்ச்சியில் உறைந்த கோபி… இந்த அவமானம் நமக்கு தேவையா?… வைரல் ப்ரோமோ இதோ..

By Begam

Updated on:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் ஆதரவை பெற்று, தற்போது இந்த சீரியலில் டிஆர்பி யிலும் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. நேற்றைய எபிசோடில் கோபி குடித்துவிட்டு ராதிகாவிடம் திட்டு வாங்குகிறார்.

   

இதை தொடர்ந்து இன்றைய எபிசோடில் தற்பொழுது இவர் பாக்கியாவை பின் தொடர்ந்து வருகிறார். இதற்கு காரணம் பாக்யா ரஞ்சித்துடன் நெருங்கி பழக தொடங்கி இருப்பது தான். இதனால் பொறாமையில் பொங்கி எழுந்து வருகிறார் கோபி. நேற்றைய எபிசோடில் பாக்கியா பற்றி பெருமையாக பேசி ராதிகாவிடம் மாட்டிக் கொள்கிறார்.

மேலும் ரஞ்சித் பற்றி பாக்கியவிடமே நேரில் பேசி விடுவோம் என்று பாக்யாவை பார்த்து நேரில் பேசும் கோபியை நோஸ்கட் செய்து விடுகிறார் பாக்யா. நடுரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது அவரை வழிமறித்து ரஞ்சித்துடன் பைக்கில் சென்றது பற்றி கேட்கிறார் கோபி.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாக்யா ‘அதைக் கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை’ எனவும், மேலும் ‘என்னை follow பண்ணாதீங்க’ எனவும் கூறுகிறார். இவ்வாறு பரபரப்பாக  பாக்கியலட்சுமி சீரியல் பிரமோ தற்பொழுது வெளிவந்துள்ளது. இதோ அந்த வைரல் ப்ரோமோ வீடியோ….