2026 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது இணையத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவருடைய கணிப்புகளில் இதுவரை 85 சதவீதம் வரை சரியாக நடந்துள்ளதால் வருடம் ஆரம்பிக்கும் சமயத்தில் பாபா வங்காவின் அந்த ஆண்டுக்கான கணிப்பு பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் அனைவர் மத்தியிலும் அதிகரிக்கிறது. கண் பார்வையை இழந்த பாபா வங்கா எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி பெற்றதால் அவர் இறப்பதற்கு முன்பு அனைத்தையும் எழுதி வைத்துள்ளார். இவர் உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவற்றில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்துள்ளது.
இந்நிலையில் தற்போது பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் இணையத்தில் அசுர வேகத்தில் கவனம் ஈர்த்துள்ளது. பாபா வங்கா 2026 ஆம் ஆண்டில் மிகப்பெரிய போர் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆசியா மற்றும் ஐரோப்பாவில் ஆரம்பமாகும் இந்த மோதல் உலக நாடுகளின் எல்லைகளையே மாற்றி அமைக்கும் அளவுக்கு மிகப் பெரும் மோதலாக உருவெடுக்கும் அபாயம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அளவில் பூமிக்கு வெளியே இருக்கும் உயிரினங்களுக்கு மனிதர்களுக்குமான தொடர்பு முதல் முறையாக நிகழும். ஒரு பிரம்மாண்ட விண்கலம் பூமிக்குள் நுழையவும் வாய்ப்பு உள்ளது.
2026 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனித கட்டுப்பாட்டை மீறி அசுர வளர்ச்சி காணும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது வேலை வாய்ப்புகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் AI முடிவெடுக்கும் நிலை உருவாகும். இப்போதே ஓரளவுக்கு இந்த நிலை தான் நிலவுகிறது என்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் பணவீக்கம் அதிகரித்து பல நாடுகளின் கரன்சி மதிப்பு வீழ்ச்சி அடையும்.
முக்கிய வங்கிகள் திவாலாகும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். மேலும் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 2026 ஆம் ஆண்டில் உச்சத்தை தொடும் என்றும் பூமியின் எட்டு சதவீத நிலப்பரப்பு கடுமையான நிலநடுக்கம், வெள்ளம், எரிமலை வெடிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாபா வங்காவில் கணிப்புகள் குறியீடுகளாகவே இருக்கும். மேலும் அவர் எதையும் முழுமையாகவும் தெளிவாகவும் எழுதி வைக்காததால் இவை அனைத்தும் அவரை பின்பற்றுபவர்களால் சொல்லப்படும் தகவல் மட்டுமே என்றும் குறிப்பிடப்படுகிறது.
