அட.. இவர்கள்தான் மிர்ச்சி விஜயின் மனைவி மற்றும் மகனா?… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ!…

By Begam

Published on:

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளராக இருக்கும் மிர்ச்சி விஜயின் மனைவி மற்றும் மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரேடியோ ஜாக்கியாக இருந்து சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக களமிறங்கியவர் விஜய். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதமே தனி. இவருக்கென ரசிகர்கள் அதிகம் உள்ளனர். மிர்ச்சி விஜய் என்றால் தெரியாதவர்களே இத்துறையில் இருக்க முடியாது. இவர் சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார்.

   

இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

மிர்ச்சி விஜய் மோனிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மிர்ச்சி விஜய் தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்பப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….