சமீபத்தில் திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் 86 வயதான நிலையில் மூப்பு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ரஜினி கமல் உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் நடித்த பல வெற்றிப் படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவு குறித்து ரஜினி கமல் உள்ளிட்ட பலரும் ஆழந்த இரங்கலை தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் வருகிற ஜனவரி 4ம் தேதி மறைந்த தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு நினைவஞ்சலி கூட்டம் நடக்கிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ வளாகத்தில் ஏவிஎம் நிறுவனம் சார்பில் இந்த கூட்டம் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
