டேய்… பணத்த அனுப்புடா… இல்லன்னா கொன்னுடுவோம்?… கிரைண்டர் ஆப் மூலம் வீட்டுக்கே வந்து தாக்குதல்… சென்னையில் பகீர் சம்பவம்…!!

By Swetha on ஐப்பசி 3, 2026

Spread the love

சென்னை ராமாபுரத்தில் கிரைண்டர் செயலி மூலம் அறிமுகமான 27 வயதுடைய தனியார் நிறுவன ஊழியரைத் தாக்கி, ஆன்லைன் மூலம் ரூ 1,300 பறித்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் முகலிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன் (26) மற்றும் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த ஜினேஷ்கண்ணன் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 29 அன்று இரவு, மணிகண்டனும் ஜினேஷ்கண்ணனும் டில்லிபாபுவின் வீட்டிற்குச் சென்று அவரைத் திட்டி, தாக்கிப் பணத்தைப் பறித்துள்ளனர். மறுநாள் டில்லிபாபு அனுப்பிய திட்டல் குறுஞ்செய்தியால் ஆத்திரமடைந்த இருவரும், மீண்டும் அவர் வீட்டிற்குச் சென்று கொலை மிரட்டல் விடுத்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

   

இதுகுறித்து டில்லிபாபு அளித்த புகாரின்பேரில், அக்டோபர் 1 அன்று ராமாபுரம் காவல் துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ஜினேஷ்கண்ணன் மீது ஏற்கனவே ஒரு குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.