
CINEMA
பிரசவத்துக்கு பின் ஆள் அடையாளம் தெரியாமல் குண்டாகிய அட்லியின் மனைவி பிரியா… புகைப்படத்தை பார்த்து ஷாக்கில் ரசிகர்கள்…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குநர் அட்லியும், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. சமீபத்தில் இயக்குனர் அட்லீயும் அவரது மனைவியும் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பிரம்மாண்ட ஆடை அணிந்து மனைவியுடன் ரெட் கார்பெட் ஃபோட்டோ ஷூட்டில் கலந்து கொண்டனர் அட்லி – பிரியா. தற்போது இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘குழந்தை பிறந்த பிறகு பிரியா முன்பை விட செம குண்டாயிட்டாங்களே’ என்று அதிர்ச்சியில் உள்ளனர்.