இந்திய சினிமாவில் இதுவரை யாரும் பெறாத மிகப்பெரிய சம்பளம்.. அட்லீயை வளைத்துப் போட்ட நிறுவனம்..!

By Mahalakshmi on மே 29, 2024

Spread the love

இயக்குனர் அட்லியின் அடுத்த படத்தை நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க உள்ள நிலையில் அதற்கு மூன்று மடங்கு அதிகம் சம்பளம் வழங்க பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ  தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய பிரபலங்களான ஆரியா, ஜெய், நஸ்ரியா, நயன்தாரா உள்ளிட்ட நடிகர்களை வைத்து ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.

   

அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் ஆஸ்த்தானை இயக்குனராக வளம் வந்த இவர் தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார் .பிறகு பாலிவுட் பக்கம் சென்ற அட்லி நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் 1200 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.

   

 

இதனால் பான் இந்தியா இயக்குனராக வலம் வரும் அட்லி தற்போது அல்லு அர்ஜுனை வைத்து புதிதாக ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்தை தயாரிப்பதில் மிகப்பெரிய போட்டி நிலவுகின்றது. அட்லிக்கு இதுவரை யாரும் பெறாத மிகப்பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அவரை கமிட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அட்லி.

ஜவான் படத்திற்கு பெற்ற சம்பளத்தை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது அல்லு அர்ஜுன் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தையும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகின்றது. இந்நிலையில் அல்லு அர்ஜுனனின் அடுத்த திரைப்படத்தையும் அந்த நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாக சினிமாவில் பேச்சு அடிபட்டு வருகின்றது.

author avatar
Mahalakshmi