தந்தையுடன் நெருக்கமாக… இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்!…. தீயாய் பரவும் புகைப்படம் இதோ!…

தந்தையுடன் நெருக்கமாக… இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அருண் விஜய்!…. தீயாய் பரவும் புகைப்படம் இதோ!…

நடிகர் அருண் விஜய் தனது தந்தையுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தனது தந்தையின் உடல்நிலை குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக 1995ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய்.

இதைத்தொடர்ந்து பிரியம், காத்திருந்த காதல், துள்ளி திரிந்த வானம், கண்ணால் பேசவா, முத்தம், இயற்கை, தவம், வேதா என்று எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார். 2012ல் தடையறத் தாக்க என்ற படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தல அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலமாக வில்லனாக அவதாரம் எடுத்தார்.

இந்த படம் அவருக்கு ஒரு நல்ல ரீ எண்ட்ரியாக அமைந்தது. இதை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம், சாகோ போன்ற மாஸ் படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார் அருண் விஜய். தற்பொழுது பல திரைப்படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் நடிகர் அருண் விஜய்.

இந்நிலையில் நடிகர் விஜயகுமாரின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வந்தது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் அருண் விஜய் தனது instagram பக்கத்தில் தனது தந்தை விஜயகுமாருடன் இருக்கும்  புகைப்படத்தை பகிர்ந்து ‘எனது தந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார். தவறான வதந்திகளை பரப்பாதீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்….

Begam