Categories: CINEMA

தொடங்கியாச்சு திருமண வைபோகம்.. ஹெல்தி, மெஹந்தி என என்ஜாய் பண்ணும் அர்ஜுன் மகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல நகைச்சுவை நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் வருகிற ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் தற்போது இரு வீட்டார் திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். 90களில் டாப் நடிகராக வலம் வந்த அர்ஜுன் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகின்றார். இவர் கடைசியாக லியோ திரைப்படத்தில் விஜயின் சித்தப்பாவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகிய இவர் தனது தந்தையுடன் சேர்ந்து இயக்கத்தில் ஈடுபட்டார். தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்த இவர் நடிகர் உமாபதி ராமையாவை காதலித்து வந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நகைச்சுவை நடிகர் உமா தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவிற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இருவருக்கும் ஜூன் 10ஆம் தேதி சென்னையில் அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் தொடர்பான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றன. இதில் திரை பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தனது நண்பர்களுடன் சமீபத்தில் bali-யில் பேச்சுலர் பாட்டி கொண்டாடி இருந்தார்.  இதை தொடர்ந்து தற்போது தனது குடும்பத்தினருடன் ஹெல்தி மற்றும் மெஹந்தி நிகழ்ச்சியை கொண்டாடி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

2 மணி நேரங்கள் ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

4 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

5 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

5 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

8 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

8 மணி நேரங்கள் ago