அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல நகைச்சுவை நடிகரான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் வருகிற ஜூன் 10ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில் தற்போது இரு வீட்டார் திருமண கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். 90களில் டாப் நடிகராக வலம் வந்த அர்ஜுன் தற்போது முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தி வருகின்றார். இவர் கடைசியாக லியோ திரைப்படத்தில் விஜயின் சித்தப்பாவாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது விடாமுயற்சி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா, இவர் விஷால் நடிப்பில் வெளிவந்த மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனை தொடர்ந்து சினிமாவிலிருந்து விலகிய இவர் தனது தந்தையுடன் சேர்ந்து இயக்கத்தில் ஈடுபட்டார். தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்த இவர் நடிகர் உமாபதி ராமையாவை காதலித்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நகைச்சுவை நடிகர் உமா தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்த விழாவிற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இருவருக்கும் ஜூன் 10ஆம் தேதி சென்னையில் அர்ஜுன் கட்டி இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணம் தொடர்பான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து ஜூன் 14ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றன. இதில் திரை பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தனது நண்பர்களுடன் சமீபத்தில் bali-யில் பேச்சுலர் பாட்டி கொண்டாடி இருந்தார். இதை தொடர்ந்து தற்போது தனது குடும்பத்தினருடன் ஹெல்தி மற்றும் மெஹந்தி நிகழ்ச்சியை கொண்டாடி இருக்கின்றார். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.