தனது அன்பு மகளின் பிறந்தநாளை முன்னிட்டு… புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய அறந்தாங்கி நிஷா!…. வைரலாகும் புகைப்படம் இதோ!…

தனது அன்பு மகளின் பிறந்தநாளை முன்னிட்டு… புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறிய அறந்தாங்கி நிஷா!…. வைரலாகும் புகைப்படம் இதோ!…

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அறந்தாங்கி நிஷா தற்பொழுது தனது மகளின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

‘சின்னத்திரை நயன்தாரா’ என தன்னை பாசிட்டிவாகவே கூறிக் கொள்பவர் அறந்தாங்கி நிஷா. இவர் ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியில் ஸ்டான்ட் அப் காமெடி செய்து பிரபலமானார். தன்னை யார் கிண்டல் செய்தாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் தனது திறமையால் மட்டும் முன்னேறிய அறந்தாங்கி நிஷா தற்போது  தொகுப்பாளினியாகவும், வெள்ளித்திரையில் ஏராளமான படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்து வருகிறார்.

தற்பொழுது மாரி 2, கோலமாவு கோகிலா, திருச்சிற்றம்பலம் என தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நிஷா. இவர் அடுத்ததாக வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

நிஷாவின் கணவர் பெயர் ரியாஸ். அழகிய ஜோடியான இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. அறந்தாங்கி நிஷாவும் அவரது கணவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ்’ சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அறந்தாங்கி நிஷா. இவர் தற்பொழுது போட்டோஷூட்கள் நடத்தி அவரது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று தனது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தன்மகளின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அறந்தாங்கி நிஷா.

மேலும் அவர் அந்த பதிவில், ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பு மகளே, என் வாழ்க்கையில் அர்த்தம் தந்தவள் நீ, எனக்கு இன்னொரு தாயும் நீ, வாழ்க்கையில் எல்லா செல்வமும் பெற்று நீ வாழ்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் தங்கமே’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

Begam