உடல்நல குறைவால் திடீரென மரணம் அடைந்த மற்றுமொறு ‘வெண்ணிலா கபடி குழு’ நடிகர்!…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!…

உடல்நல குறைவால் திடீரென மரணம் அடைந்த மற்றுமொறு ‘வெண்ணிலா கபடி குழு’ நடிகர்!…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!…

‘வெண்ணிலா கபடி குழு’ நடிகரான நடிகர் மாயி சுந்தர் தற்போது உடல்நல குறைவால் இன்று அதிகாலை மரணம் அடைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சுசீந்திரன் இயக்கத்தில் 2009ல் வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் மாயி சுந்தர். இவர் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான ஸ்கெட்ச், விஷ்ணு விஷாலின் குள்ள நரி  கூட்டம், துள்ளாத மனமும் துள்ளும், கட்டா குஸ்தி போன்ற பல திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்தியில் கடந்த சில நாட்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார் நடிகர் மாயி சுந்தர். இவர் தனது சொந்த ஊரான மன்னார்குடியில் மஞ்சள் காமாலை நோய்க்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்துள்ளார்.

இவரைப்போலவே ‘வெண்ணிலா கபடி குழு’ நடிகரான ஹரி வைரவனும்  சில வாரங்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தற்பொழுது அதே  திரைப்படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகரான மாயி சுந்தர் உயிரிழந்திருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது இவரின் மறைவுக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Begam