மணிமேகலையை தொடர்ந்து ‘CWC 4’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் மற்றுமொரு கோமாளி… நீங்களுமா?… அப்ப ஷோவைக் கிளோஸ் பண்ண வேண்டியது தான்…

மணிமேகலையை தொடர்ந்து ‘CWC 4’ நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் மற்றுமொரு கோமாளி… நீங்களுமா?… அப்ப ஷோவைக் கிளோஸ் பண்ண வேண்டியது தான்…

கொரோனா லாக் டவுன்  சமயத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியானது பலரது மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் சமையல் நிகழ்ச்சியை காமெடி கலந்து கலகலப்பாக கொடுப்பதே. தற்பொழுது இந்த நிகழ்ச்சியின் 3 சீசன் நிறைவடைந்து, 4வது சீசன் தற்பொழுது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது.

இந்த சீசனில் நடிகை ஷெரின், விசித்ரா, மேகா பட நடிகை ஸ்ருஷ்டி, சிவகர்த்திகேயன் பட நடிகை ஆண்ட்ரியான், ராஜ் ஐயப்பா, பாக்கியலட்சிமி, VJ விஷால், கிஷோர் ராஜ்குமார், காளையன் , மைம் கோபி, ஜி பி முத்து, சிங்கப்பூர் தீபன், மணிமேகலை, சுனிதா, ரவீனா, தங்கதுரை, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் கலந்து கொண்டுள்ளனர்.

தற்பொழுது வரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரே இரண்டு  போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வந்த மணிமேகலை திடீரென இந்த ஷோவை விட்டு வெளியேறுவதாக கூறி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சி கொடுத்தார். இவர் ஏன் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் என்பதை பற்றி வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இவரைத்தொடர்ந்து தற்பொழுது குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது கோமாளியாக கலக்கி வரும் குரேஷியும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுகிறார் என டுவிட் ஒன்று வைரலாகி வந்தது. ஆனால் இப்போது அந்த டுவிட் டெலிட் செய்யப்பட்டுள்ளது. இதனால் எது உண்மை என்று தெரியாமல்  ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதோ அந்த டெலீட் செய்யப்பட்ட ட்வீட்…

Begam