மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் முக்கிய அறிவிப்பை எதிர்வரும் பட்ஜெட் தொடரில் முதலமைச்சர் விஜய் வெளியிடுவார் என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், புதிய விண்ணப்பங்கள் தற்காலிகமாகப் பெறப்படாது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 60 வயதுக்கு மேற்பட்ட பயனாளிகளை முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் முறைப்படுத்தி இணைக்கும் பணிகளில் அரசு தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு தகுதியுள்ள நபர்களைப் பிரித்தெடுத்த பிறகு, இத்திட்டத்திற்கான இறுதி நிதியொதுக்கீடு மற்றும் பயனாளிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு, அதன்பின்னரே புதிய விண்ணப்பங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட அரசு திட்டமிட்டுள்ளது.
