தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே மகளிர் உரிமைத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தும் முக்கிய அறிவிப்பு இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தினால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்களிடையே அமோக ஆதரவு கிடைக்கும் என்றும், வரும் தேர்தலில் இது ஆளுங்கட்சிக்குக் கடும் சவாலாக அமையும் என்றும் உளவுத்துறை அளித்த ரகசிய அறிக்கையின் அடிப்படையில், அரசு இந்த அதிரடி முடிவை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அடுத்த மாதமே அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தகுதியுள்ள புதிய பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்று இத்திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
