தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட பாஜக தலைவர் அண்ணாமலை தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொங்கு மண்டலத்தை மையப்படுத்தி அரசியல் செய்து வரும் அண்ணாமலையை, அங்குள்ள பெருந்துறை தொகுதியில் போட்டியிடுமாறு அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், தேர்தலில் போட்டியிடுவது குறித்து அண்ணாமலை பல்வேறு கோணங்களில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டால் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் எவ்வளவு உள்ளன, அங்குள்ள அதிகார பலம், மற்றும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் ஆள்பலம் ஆகியவை குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் விரிவாக விவாதித்து வருகிறார்.
