Connect with us

‘அண்ணாமலை’ சீரியல் நடிகை பூஜா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? திருமணமாகி இவ்ளோ பெரிய குழந்தைகளா..? 

CINEMA

‘அண்ணாமலை’ சீரியல் நடிகை பூஜா இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? திருமணமாகி இவ்ளோ பெரிய குழந்தைகளா..? 

 

சன் தொலைக்காட்சியில்  2002 ல் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் அண்ணாமலை.  இந்த சீரியலின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தவர் நடிகை பூஜா. சீரியல்களின் படபிடிப்பில் பயங்கர சேட்டையும், குறும்புதனமும் செய்துகொண்டே இருப்பாராம். இதனால் இவருக்கு குட்டி பூஜா என்ற பட்டப்பெயரும் உள்ளது.

   

இதைத்தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார்.இதைத்தொடர்ந்து, பல சீரியல்களில் வாய்ப்பு கிடைக்க பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார் பூஜா.

 

இதைத்தொடர்ந்து மது என்பவரை திருமணம் செய்துகொண்டு கனடா நாட்டில் செட்டிலானார் பூஜா. திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு குடும்பத்தை மட்டும் கவனித்துக் கொண்டார். தற்போது இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.

அவரது மூத்த மகளுக்கு சினிமாவில் நடிக்கும் ஆசை உள்ளதாம், அவர் படிப்பு முடித்து நடிக்க விரும்பினால் கண்டிப்பாக அதற்காக தான் உதவுவேன் என்றும் பூஜா கூறியிருக்கிறார். இவர் தற்பொழுது கனடாவில் டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்து வருகிறார்.

இவர் சீரியல்களில் நடிக்க வில்லை என்றாலும் கனடாவிலிருந்து தமிழ் சீரியல்கள் எல்லாம் பார்ப்பதாகவும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிமை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.  தற்பொழுது கனடாவில் வசிக்கும் இவரது குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

 

Continue Reading
To Top