டைரக்டர் விட்டாலும் எடிட்ராவது இந்த விஷயத்தை கவனிச்சிருக்க வேண்டாமா.. அஞ்சான் படத்தில் காதல் ஆசை பாடலில் நடந்த மிஸ்டேக்..!!

By admin on ஆனி 22, 2024

Spread the love

பிரபல நடிகரானன சூர்யா நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு அஞ்சான் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை லிங்குசாமி இயக்கினார். இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சூர்யாவுக்கு ஜோடியாக அஞ்சான் படத்தில் சமந்தா நடித்தார். மேலும் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் வாஜ்பாய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

Kaadhal Aasai Song lyrics

   

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். அஞ்சான் திரைப்படம் தெலுங்கில் சிகந்தர் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்ட ரிலீஸ் ஆனது. படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது/ இந்த படத்தில் இடம்பெற்ற பேங் பேங், ஒரு கண் ஜாடை, ஏக் தோ தீன், காதல் ஆசை, சிரிப்பு என் உள்ளிட்ட பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

   

Kaadhal Aasai Song lyrics | Movie Anjaan | Actor Suriya

 

இந்த நிலையில் காதல் ஆசை யாரை விட்டதோ பாடலில் ஒரு மிஸ்டேக் இருப்பதை யாராவது கவனித்தீர்களா. அந்த பாடலில் ஒருவர் தலையில் பெட்டி வைத்து நடந்து வரும்போது செல்போனில் பேசிக் கொண்டு வரும் சமந்தாவும், சூர்யாவும் அவரை தெரியாமல் இடித்து எதிரெதிர் திசையில் நடப்பார்கள்.

Tamil Super Hit Songs - Download latest tamil songs: Kadhal Aasai Song  Lyrics From Anjaan - Surya - Samantha

மிஸ்டேக் என்னவென்றால் சூர்யா இடிக்கும்போது அந்த நபர் கண்ணாடி போட்டு இருப்பார். பின்னர் சமந்தா இடிக்கும்போது அவர் கண்ணாடி போடாமல் இருப்பார். வெவ்வேறு நேரங்களில் அந்த சீன் எடுக்கப்பட்டு எடிட் மூலம் ஒன்றாக சேர்த்துள்ளனர். டைரக்டர் இதனை கவனிக்காமல் விட்டாலும் எடிட்டர் ஆவது இதனை கவனித்திருக்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.