Connect with us

தோழிகளுக்கு மது விருந்து வைத்து பிறந்தநாள் கொண்டாடிய அனிதா விஜயகுமார்… உங்களுக்கு இத்தனை வயசா..? நம்பவே முடியல…

CINEMA

தோழிகளுக்கு மது விருந்து வைத்து பிறந்தநாள் கொண்டாடிய அனிதா விஜயகுமார்… உங்களுக்கு இத்தனை வயசா..? நம்பவே முடியல…

 

தமிழ் திரையுலகின் மூத்த நடிகராக இருப்பவர் விஜயகுமார். இவர் அதிக அளவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இவருக்கு முத்துகண்ணு மற்றும் மஞ்சுளா இன்று இரண்டு மனைவிகள் உள்ளனர். மூத்த மனைவி முத்து கண்னுக்கு அனிதா, கவிதா, அருண் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

   

இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி மூன்று மகள்கள் என விஜயகுமாருக்கு மொத்தம் ஐந்து மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். முதல் மனைவி முத்துக்கண்ணுவின் பிள்ளையான கவிதா விஜயகுமார் ‘கூலி’ என்ற படத்தில் சரத்குமாரின் தங்கையாக நடித்திருப்பார்.

அருண் விஜய் ஹீரோவாக நடித்து  சமீபத்தில் ‘யானை’ திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு பிறந்த  வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகிய மூன்று பேருமே ஹீரோயின்களாக நடித்தவர்கள்.

ஆனால் இவர்களில் வனிதா மட்டுமே தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார். விஜயகுமாரின் ஐந்து பிள்ளைகளில் நான்கு பேர் சினிமாவில் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றனர். ஆனால் இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் மட்டும் தான். எனவே அவரைப் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை 1997ல் திருமணம் செய்து கொண்டு தோஹாவில் செட்டில் ஆனார்.  இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் அனிதா எப்பொழுதும் இணையதளத்தில் ஆக்டிவாக இருப்பார். இவர் தனது 50- வது பிறந்தநாளை 3 மாதங்களுக்கு முன்பே தனது குடும்பத்துடன் கொண்டாடினர்.

இதையடுத்து தோஹா கிளம்பி சென்ற அனிதா விஜயகுமார், நவம்பர் 4-ந்  தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். அனிதாவின் பிறந்தநாளுக்காக அவரது அக்கா கவிதா அமெரிக்காவில் இருந்து ஜார்ஜியா சென்றிருந்தார்.

அதுமட்டுமின்றி இந்தியாவில் இருந்தும் அவரது தோழிகள் மற்றும் நடிகர் அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். தன்னுடைய 50-வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு சரக்குடன் பார்ட்டி வைத்து அமர்க்களப்படுத்தி உள்ளார்  அனிதா. இதுதொடர்பான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top