கே.என். நேரு மூலம் தலைமையிடம் பேச்சுவார்த்தை…? துணை பொதுச்செயலாளர் பதவிக்காக காய் நகர்த்தும் அனிதா ராதாகிருஷ்ணன்…! பரபரப்பில் அரசியல் களம் …!!

By Devi Ramu on புரட்டாதி 1, 2026

Spread the love

திமுகவில் உட்கட்சி மறுசீரமைப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாவட்டங்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்த்தப்பட்டு, நிர்வாகிகளுக்கு 70 வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் 70 வயதைக் கடந்த 13 மூத்த நிர்வாகிகள் தங்களது மாவட்டச் செயலாளர் பதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில், மாவட்டச் செயலாளர் பதவியை இழக்கவுள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பைக் கைப்பற்றத் தீவிரமாகக் காய் நகர்த்தி வருவதாகக் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்காகக் கட்சியின் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு மூலமாக திமுக தலைமைக்குத் தூது அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.

   

தூத்துக்குடி மாவட்டத்தில் தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், கட்சியில் தனக்கான முக்கியத்துவத்தைக் குறைத்துவிடக் கூடாது என்பதற்காகவும் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போது திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை நடத்தப்பட்டு வரும் நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் உட்படப் பல மூத்த தலைவர்களும் அந்த இடத்தைப் பிடிக்கக் கடும் போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர்.