ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தை சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மதராஸி திரைப்படத்தில் ருக்மணி வசந்த், விக்ராந்த், வித்யூத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். வருகிற செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் அனிருத், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத் நான் இன்று இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் சிவகார்த்திகேயன் தான். எனது முதல் பிளாக்பஸ்டர் படம் எதிர்நீச்சல்.
அது சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம். மதராஸி திரைப்பட ட்ரெய்லரில் “இது என் ஊருடா நான் நிற்பேன்” என சிவகார்த்திகேயன் கூறுவார். அது மாதிரி “இது என் SK… நான் வந்து நிற்பேன்” என அனிருத் பேசியுள்ளார். மேலும் ஒரு நாள் நான் பீல்டு அவுட் ஆவேன். அப்போது என் மனம் சிவகார்த்திகேயன் ஜெயிக்கிறதை பார்த்து நான் ஜெயித்ததாக நினைத்து சந்தோஷப்படுவேன் என கூறினார்.
அவர் பேசியதை கேட்டதும் சிவகார்த்திகேயன் கண் கலங்கினார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் பேசும்போது, அனிருத் பீல்ட் அவுட் எல்லாம் ஆக மாட்டார். அதற்கு வாய்ப்பு கிடையாது. ஷாருக்கான் தொடங்கி எல்லாரையும் பார்த்து விட்டார். அவர் இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டியிருக்கு என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
விமானப்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Flying And Ground Duty காலி…
பீகாரில் இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு பாடமாக இருக்கும் என அரசியல்…
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…